சில வினாடிச் சூழ்நிலையில்
எனைச் சுற்றி இருந்த நீர்த்துளிகள் எல்லாம்
தாவி குதித்து உருண்டு ஓடிட,
மத்தியிலிருக்கும் நானோ,
சற்றும் ஓயாமல்,
தளும்பியே களைத்த தண்ணீர்.....!!!
ஆயிரம் நீர்த்துளிகள் சேர்ந்து,
என் மேல் விழுந்து அமுக்கிய போதிலும்,
தேங்கிப் போய் தங்கி விடாமல்,
திறன் கொண்டு மேலே வந்து,
மத்தியிலே தளும்பி நிற்ப்பேன்....
நான் இருக்கும் குடுவையின்
மூலை முதல், முடுக்கு வரை அறிந்து வந்தவள்...
ஆனால் அவ்வறிவு, வெறும் குடுவையியல் மட்டுமல்ல.....
நீர்த்துளிகள் பற்றிய வேதாந்தமும் கூடத்தான்....
பல துளிகள் இங்கே ஒன்று சேர்ந்து வசித்திருக்க,
என் "துளி" உடம்பை
"தண்ணீர்" எனக் கூறிக்கொள்ளும் கர்வம் மிகுந்தவள்...
ஆனாலும் சில வினாடிச் சூழ்நிலையில்,
வெற்றி கண்டு
கீழே தாவி உருண்டோடிய துளிகளுக்கு மத்தியில்,
தளும்பியே களைத்த, ஆனால்......
"தனித்து நிற்கும் தண்ணீர் நான்.......!!!!"
ருத்ரப் பாவை..
சடுதிப் புறப்பாட்டில்,
இறக்கைகள் பிய்ந்து -
பிராணத் தேடலின் வேர்க்காற்று
பலமாய் குருதியில் கலந்து
கொப்பளிக்கும் குமிழிகளை
தன் கூர் அலகில் தோய்த்தெடுத்து,
எதிர் நிற்கும் மானுடம் துளைக்க
பறந்து செல்லும்
என் சிவப்பு "ஆத்திரப்" பறவையும்
அதனின் மொத்த பளுவும்;
அழுத்தச் சமன்நிலை
செறிவுற்று நிரம்பி,
வெடிக்கத் தடமற்று,
உப்பித் தொங்கும் நிமிடத்தில்
என் விரல் தூக்கி எறிந்து
தெறிக்கும் அத்தனை சுக்கிலும்
என் தொங்கி நின்ற அகங்காரம்!!
நானே - என் அத்தனைக்கும் சல்லடை...
ஆத்திரம் வடிகட்டி
சக்கைப் பருகல் பல நேரம்;
நானே - என் அத்தனைக்கும் குயவன்....
ஆத்திர மண்கொண்டே
பாண்டங்கள் பல நேரம்...
நேர்க்கோட்டுச் சூழலில்,
சுழியேற்றித் தடம் மாற்றி
அதனூடே சுழித்துப் போன
ருத்ரப் பாவையாய்....
நானே,
என் அத்தனைக்கும் நானே...
இறக்கைகள் பிய்ந்து -
பிராணத் தேடலின் வேர்க்காற்று
பலமாய் குருதியில் கலந்து
கொப்பளிக்கும் குமிழிகளை
தன் கூர் அலகில் தோய்த்தெடுத்து,
எதிர் நிற்கும் மானுடம் துளைக்க
பறந்து செல்லும்
என் சிவப்பு "ஆத்திரப்" பறவையும்
அதனின் மொத்த பளுவும்;
அழுத்தச் சமன்நிலை
செறிவுற்று நிரம்பி,
வெடிக்கத் தடமற்று,
உப்பித் தொங்கும் நிமிடத்தில்
என் விரல் தூக்கி எறிந்து
தெறிக்கும் அத்தனை சுக்கிலும்
என் தொங்கி நின்ற அகங்காரம்!!
நானே - என் அத்தனைக்கும் சல்லடை...
ஆத்திரம் வடிகட்டி
சக்கைப் பருகல் பல நேரம்;
நானே - என் அத்தனைக்கும் குயவன்....
ஆத்திர மண்கொண்டே
பாண்டங்கள் பல நேரம்...
நேர்க்கோட்டுச் சூழலில்,
சுழியேற்றித் தடம் மாற்றி
அதனூடே சுழித்துப் போன
ருத்ரப் பாவையாய்....
நானே,
என் அத்தனைக்கும் நானே...
ஒரு கன்றின் ஒரு நாள் கதை...
அவன் இட்ட வைக்கோல்என் கால் வயிறு அடைத்திருக்க,
மீதத்திர்க்காய் தலைதூக்கிஎன் தாயைக் கண்டேன்...
"கோ" மாதா அவளும் தன்னை
தாம்பினாலே சிறையும் தந்து,
உயிர் பரிதவிக்க,
ஊன் அங்கே வெண்ணிறத்தில் கரையக் கண்டேன்...
இவ்விடத்தே தாம்பிர்க்குப் பஞ்சமில்லை,
என் கழுத்தும் அதன் வசமே...
என் முக்கால் வயிறு தீயெனவே எரிந்திருக்க,
கோவதனை ஆர்வமேனப் பார்த்திருந்தால்,
ஊன் கரைதல் அதன் கண் வழியே - நிறமில்லா -
ஆனால்உப்புச் சுவைக் கொண்ட திரவம் கொண்டு நடக்கிறதே.....!!!
அது,
தன் கன்றிர்க்காய் பொங்கிவரும் அமிர்தம் தன்னை
அவன் கடத்திச் செல்லும்ஆத்ம ஊனின் நோவினாலா?
இல்லை அவன் கடத்திச் செல்லும் மும்முரத்தில்
அதிகமாய் ஓர் கை இழுவை தந்த
செதில் ஊனின் வலியினாலா?
அதை நினைதிங்கே நான் அழும் நேரம்
அவிழ்த்து விட்டான் என் தாம்பதனை...
என் தாயின் ஊன்வலியை போக்கிடவும்,
என் வயிற்றின் எரிச்சலையும் நீக்கிடவும்,
தாவிகுதித்து ஓடிச்சென்று
சுவைதிட்டேன் என் தாயின் காம்புவழி பெருகும்
"என் உணவதனை"...
அடக்கொடுமை!!
என் தாயின் ஊன் நோயும் அடங்கவில்லை,
என் பசியும் தீரவில்லை - ஆனால் தீர்ந்திட்டதாம்
இன்றைய உணவுச் சுரப்பின் அளவு மட்டும்...!!!!
மீதத்திர்க்காய் தலைதூக்கிஎன் தாயைக் கண்டேன்...
"கோ" மாதா அவளும் தன்னை
தாம்பினாலே சிறையும் தந்து,
உயிர் பரிதவிக்க,
ஊன் அங்கே வெண்ணிறத்தில் கரையக் கண்டேன்...
இவ்விடத்தே தாம்பிர்க்குப் பஞ்சமில்லை,
என் கழுத்தும் அதன் வசமே...
என் முக்கால் வயிறு தீயெனவே எரிந்திருக்க,
கோவதனை ஆர்வமேனப் பார்த்திருந்தால்,
ஊன் கரைதல் அதன் கண் வழியே - நிறமில்லா -
ஆனால்உப்புச் சுவைக் கொண்ட திரவம் கொண்டு நடக்கிறதே.....!!!
அது,
தன் கன்றிர்க்காய் பொங்கிவரும் அமிர்தம் தன்னை
அவன் கடத்திச் செல்லும்ஆத்ம ஊனின் நோவினாலா?
இல்லை அவன் கடத்திச் செல்லும் மும்முரத்தில்
அதிகமாய் ஓர் கை இழுவை தந்த
செதில் ஊனின் வலியினாலா?
அதை நினைதிங்கே நான் அழும் நேரம்
அவிழ்த்து விட்டான் என் தாம்பதனை...
என் தாயின் ஊன்வலியை போக்கிடவும்,
என் வயிற்றின் எரிச்சலையும் நீக்கிடவும்,
தாவிகுதித்து ஓடிச்சென்று
சுவைதிட்டேன் என் தாயின் காம்புவழி பெருகும்
"என் உணவதனை"...
அடக்கொடுமை!!
என் தாயின் ஊன் நோயும் அடங்கவில்லை,
என் பசியும் தீரவில்லை - ஆனால் தீர்ந்திட்டதாம்
இன்றைய உணவுச் சுரப்பின் அளவு மட்டும்...!!!!
புத்தன் வெட்டிய போதி மரம்...
புத்த புள்ளி எல்லை மட்டும்
பரவிக் கனத்த "போதி" யதை
கூர் ஆயுத முனையதிலே
ஆனைபல விசையேற்றி,
"வேர்கொய்யும் நோக்கினிலே
வெட்டுகிறான் புத்தனவன்...
...........................
"அவனே,
அம்மர நிழலடியில்,
இச்சைகளை ஈது விட்டு
இன்பத்தை இரை செய்தான்..
பின் வென்று ஈன்ற இன்பத்தை
பகிந்து விடக் கொள்கை செய்தான்!!
...................
போதி விதைபிடுங்கி பரப்பிவிட்டால்
புவிநெடுக ஞான ஒளி பரவிடுமோ......??
விடும் - எனவே நினைத்திருந்து
"ஆசை" கொண்டு காத்திருந்தான்.....
தோற்று விட்டான் சித்தார்த்தன்!
கௌதமனாய் உருமாறி!!
......................
இம்மரம்,
அதனுள் முதன்பிறந்த வேர்த் தொடங்கி
கடைத் தோன்றி வேர் வரையில்
ஞானத்தை அப்பிக் கொண்டு,
கிளை வழியே அச் "சாரம்" புகுத்தும்...
இதோ...
" அவ்வேர்க் கொய்யும் நோக்கினிலே
வெட்டுகிறான் புத்தனவன்..."
....................
கொய்தெடுக்கும் அவ்வேர்ப் பலனை,
புவி பரவிய மண்துகள் முழுதும்
புகுத்திவிடத் திட்டமிட்டு
புவியெங்கும் காடாக்கி
"போதி" யிலே செழிக்கச்செய்ய,
"வெட்டுகிறான் புத்தனவன்...
வேர்க் கொய்யும் நோக்கினிலே"
பரவிக் கனத்த "போதி" யதை
கூர் ஆயுத முனையதிலே
ஆனைபல விசையேற்றி,
"வேர்கொய்யும் நோக்கினிலே
வெட்டுகிறான் புத்தனவன்...
...........................
"அவனே,
அம்மர நிழலடியில்,
இச்சைகளை ஈது விட்டு
இன்பத்தை இரை செய்தான்..
பின் வென்று ஈன்ற இன்பத்தை
பகிந்து விடக் கொள்கை செய்தான்!!
...................
போதி விதைபிடுங்கி பரப்பிவிட்டால்
புவிநெடுக ஞான ஒளி பரவிடுமோ......??
விடும் - எனவே நினைத்திருந்து
"ஆசை" கொண்டு காத்திருந்தான்.....
தோற்று விட்டான் சித்தார்த்தன்!
கௌதமனாய் உருமாறி!!
......................
இம்மரம்,
அதனுள் முதன்பிறந்த வேர்த் தொடங்கி
கடைத் தோன்றி வேர் வரையில்
ஞானத்தை அப்பிக் கொண்டு,
கிளை வழியே அச் "சாரம்" புகுத்தும்...
இதோ...
" அவ்வேர்க் கொய்யும் நோக்கினிலே
வெட்டுகிறான் புத்தனவன்..."
....................
கொய்தெடுக்கும் அவ்வேர்ப் பலனை,
புவி பரவிய மண்துகள் முழுதும்
புகுத்திவிடத் திட்டமிட்டு
புவியெங்கும் காடாக்கி
"போதி" யிலே செழிக்கச்செய்ய,
"வெட்டுகிறான் புத்தனவன்...
வேர்க் கொய்யும் நோக்கினிலே"
"நான் தாயாகிப் போனேனே....."
நீ உயிரணுவாய் என் அண்டம் புகுந்தாய்
உள்ளுறுப்புகள் ஒன்றற்று;
வெறும் தலைவால் மாதிரி மட்டும் கொண்டு.
நீர்கருப்பையில் வந்தமர்ந்தாய்
என் சதை, ரத்தம் - கொஞ்சம்
உருவசாயலையும் கடன் கேட்டு..
அமர்ந்து கொண்டே நீ வளர்ந்தாய்..
வாழ்வதனை நான் வாழ்ந்தேன்...
மும்மாதம் முதல் தொடங்கி
என் உடல் நிலையும் மாறக்கண்டேன்..
தலைசுற்றி அசதி கொல்ல,
உடலெல்லாம் வலி பிடுங்க
இரவுறக்கம் வர மறுத்து
விடி வேளையிலே வந்தயர்த்த,
வாய் சென்ற உணவதுவும்
சென்ற வழி திரும்பி வர...................
அத்தனைக்கும் அஞ்சாமல்,
உனக்கெனவே பொறுத்திருந்தேன்..
ஐம்மாதம் வரை தன்னில்
உன் அசைவை நான் அறியவில்லை
ஆறதுவின் தொடக்கத்திலே
உன் ஆர்ப்பாட்டம் மெலிதுணர்ந்தேன்.
எட்டின் நடு மாதம்....
கைகுத்தி கால் உதைத்து
தலை உருட்டிப் பிரண்டிட்டாய்..
ஞானிகளின் "யோக" பலனாம்-
உடலுக்குள் உயிர் நெளியும் ஆனந்தம்
அதை உணரக் கண்டேன்..
மாதம் ஒன்பதைக் கடந்ததுவே...
வயிற்றுக் குடிலில் மட்டும் நீ இருந்தாய் - ஆனால்
கால்விரல் நுனி வரை
நீ பரவும் கவனம் கொண்டு
மென் பாதம் வைத்திட்டேன்..
முன்னூறு நாள் தொடங்க,
உன் உள்ளிருப்பு முடிந்ததுவாம்..
இப்புவியில் ஆண் உணரா மனவலிமை
உனை வெளியேற்றும் வலி தாங்க
நீ எனக்குப் பரிசளித்தாய்..
எனைப் பெண்ணென உணர்ந்தமுதல்
உடல் போர்த்தியேப் பழகிட்டேன்..
மருத்துவர்கள் சூழ்ந்திருக்க
நீ வரும் வழி காட்ட
எப்படியோ துணிந்திட்டேன்..
என் உடலெல்லாம் வலி பாய
நீ தலை எட்டிப் பார்த்திட்டாய்..
உன் உடல் முழுதும்
இவ்வுலகம் வர,
"நான் தாயாகிப் போனேனே
நான் தாயாகிப் போனேனே.........."
உள்ளுறுப்புகள் ஒன்றற்று;
வெறும் தலைவால் மாதிரி மட்டும் கொண்டு.
நீர்கருப்பையில் வந்தமர்ந்தாய்
என் சதை, ரத்தம் - கொஞ்சம்
உருவசாயலையும் கடன் கேட்டு..
அமர்ந்து கொண்டே நீ வளர்ந்தாய்..
வாழ்வதனை நான் வாழ்ந்தேன்...
மும்மாதம் முதல் தொடங்கி
என் உடல் நிலையும் மாறக்கண்டேன்..
தலைசுற்றி அசதி கொல்ல,
உடலெல்லாம் வலி பிடுங்க
இரவுறக்கம் வர மறுத்து
விடி வேளையிலே வந்தயர்த்த,
வாய் சென்ற உணவதுவும்
சென்ற வழி திரும்பி வர...................
அத்தனைக்கும் அஞ்சாமல்,
உனக்கெனவே பொறுத்திருந்தேன்..
ஐம்மாதம் வரை தன்னில்
உன் அசைவை நான் அறியவில்லை
ஆறதுவின் தொடக்கத்திலே
உன் ஆர்ப்பாட்டம் மெலிதுணர்ந்தேன்.
எட்டின் நடு மாதம்....
கைகுத்தி கால் உதைத்து
தலை உருட்டிப் பிரண்டிட்டாய்..
ஞானிகளின் "யோக" பலனாம்-
உடலுக்குள் உயிர் நெளியும் ஆனந்தம்
அதை உணரக் கண்டேன்..
மாதம் ஒன்பதைக் கடந்ததுவே...
வயிற்றுக் குடிலில் மட்டும் நீ இருந்தாய் - ஆனால்
கால்விரல் நுனி வரை
நீ பரவும் கவனம் கொண்டு
மென் பாதம் வைத்திட்டேன்..
முன்னூறு நாள் தொடங்க,
உன் உள்ளிருப்பு முடிந்ததுவாம்..
இப்புவியில் ஆண் உணரா மனவலிமை
உனை வெளியேற்றும் வலி தாங்க
நீ எனக்குப் பரிசளித்தாய்..
எனைப் பெண்ணென உணர்ந்தமுதல்
உடல் போர்த்தியேப் பழகிட்டேன்..
மருத்துவர்கள் சூழ்ந்திருக்க
நீ வரும் வழி காட்ட
எப்படியோ துணிந்திட்டேன்..
என் உடலெல்லாம் வலி பாய
நீ தலை எட்டிப் பார்த்திட்டாய்..
உன் உடல் முழுதும்
இவ்வுலகம் வர,
"நான் தாயாகிப் போனேனே
நான் தாயாகிப் போனேனே.........."
கண்ணீரும் வியர்வையும் கரிக்கின்ற காரணமேன்?
பரிதவிப்போ இல்லை பரவசமோ...
கண் கொண்ட நீர் அறியும்
அது பெருகிவரும் காரணம் தன்னை...
வியர்வையும் நன்கறியும் - அது
உழைப்பு விடும் பரவசக் கண்ணீரென்று....
அந்நீர்கள் நிலத்தினிலே விழுந்திட்டால்
ஊரார் பார்த்திடுவர்;
பின் அங்கே,
அந்நீரின் "நதிமூலம்" ஆய ஆர்வம் கொண்டு - ஆனால்
அதை முழுதாயும் ஆயாமல்,
அவ்வூரின் "கடைமனிதன்" அவன் செவியில்
மூலத்தைத் திரித்துப் போய்ச் சேர்த்திடுவார்
எனப் பயந்து,
யாருக்கும் தெரியாமல் ஆழியிலேக் கலந்திடவே
சட்டெனத் தன்ச்சுவை மாற்றிக்
கரித்துக்கொண்டு வந்தனவோ......???
கண் கொண்ட நீர் அறியும்
அது பெருகிவரும் காரணம் தன்னை...
வியர்வையும் நன்கறியும் - அது
உழைப்பு விடும் பரவசக் கண்ணீரென்று....
அந்நீர்கள் நிலத்தினிலே விழுந்திட்டால்
ஊரார் பார்த்திடுவர்;
பின் அங்கே,
அந்நீரின் "நதிமூலம்" ஆய ஆர்வம் கொண்டு - ஆனால்
அதை முழுதாயும் ஆயாமல்,
அவ்வூரின் "கடைமனிதன்" அவன் செவியில்
மூலத்தைத் திரித்துப் போய்ச் சேர்த்திடுவார்
எனப் பயந்து,
யாருக்கும் தெரியாமல் ஆழியிலேக் கலந்திடவே
சட்டெனத் தன்ச்சுவை மாற்றிக்
கரித்துக்கொண்டு வந்தனவோ......???
என் இதயத்தின் முதுகில் கூர் வாள்.!
என் கண்ணீர் குட்டைநிரம்பி வழிகிறதே.......!
இறையே....!
அதனை ஒரு நொடியேனும்
வற்றச் செய்து விடுவாயா...?
என் காதல் துணைக்காய்
அன்பு செய்தே வாழ்ந்த இதயம்...
அவ்விதயத்தின் முதுகில் கூர் வாள் ஏறும் பலனா??
ஆயுதஙள் என் துணைக்கெதற்கு?!
" பிரிவு " யென சிறு சைகை செய்தால்,
உதிரம் இல்லா உலர் மரணம்
அதன் விழிகளுக்கு என் பரிசு!!!
இறையே....
நான் இறந்தால் என் துணை அழுதிடுமா?
இல்லை,
என் உயிரையும் குதர சொல்லி செய்திடுமா?
நீ அறிவாயா?
இல்லை அதனை அறிந்துணரும் வரம்
நீ எனக்கருள்வாயா.....????!
இறையே....!
அதனை ஒரு நொடியேனும்
வற்றச் செய்து விடுவாயா...?
என் காதல் துணைக்காய்
அன்பு செய்தே வாழ்ந்த இதயம்...
அவ்விதயத்தின் முதுகில் கூர் வாள் ஏறும் பலனா??
ஆயுதஙள் என் துணைக்கெதற்கு?!
" பிரிவு " யென சிறு சைகை செய்தால்,
உதிரம் இல்லா உலர் மரணம்
அதன் விழிகளுக்கு என் பரிசு!!!
இறையே....
நான் இறந்தால் என் துணை அழுதிடுமா?
இல்லை,
என் உயிரையும் குதர சொல்லி செய்திடுமா?
நீ அறிவாயா?
இல்லை அதனை அறிந்துணரும் வரம்
நீ எனக்கருள்வாயா.....????!
கிழக்கு நமஸ்காரம் (சூரிய நமஸ்காரம் அல்ல....!!!)
என் தேடல்கள்,
உச்சி தொடங்கி,
கால் விரலின் நுனி தாண்டி
நூற்றாண்டு அணைக்கட்டு
வெள்ளப்பெருக்கில் உடைவடைப் போல
திடுமெனப் பொங்கிப் பெருகும் போதெல்லாம்,
மிகச்சரியாய்,
நான் கிழக்கு நோக்கி யாசிக்கத் தொடங்குகிறேன்...!!
அதுவும் பொய்யெனப் பொய்த்துப் போகாமல்,
முதலில் இரு கண்களை மூடி -
அதனைத்தொடர்ந்து கைகளைக் கூப்பியும்..
என் சனனக் காலம் முதற்கொண்டு,
அங்கே அதுவும்,
இங்கே இதுவும் எனதேடி முடித்தப் பிறகும்
எனக்கும்,
என் இதயத்தின் கனத்தைக் கூட்டும் மனதிற்கும் விளங்கவில்லை
"ஏனோ இந்த யாசகம்.....??"
கிழக்கு -விடியல்களை தினமும் பரிசளிக்கும் திசை என
சூரியன் உணர்துவதாலா?
இல்லை
தினசரி விடியல்களை
கிழக்கெதிர் திசைபிடுங்கித் தின்பதாலா..??
உதிக்க வைத்துப் பின் தின்னக்கொடுத்து
மீண்டும் உதித்து எழச் செய்வதாலோ என்னவோ
கிழக்கு ஒரு உன்னத திசை
என்பதை நான் அறிந்துசெய்யும் இந்த யாசகம்..
எனக்கும் ஒரு விடியலை தின்னக் கொடுக்கும்
எனும் "நம்பிக்கையில்..........."
உச்சி தொடங்கி,
கால் விரலின் நுனி தாண்டி
நூற்றாண்டு அணைக்கட்டு
வெள்ளப்பெருக்கில் உடைவடைப் போல
திடுமெனப் பொங்கிப் பெருகும் போதெல்லாம்,
மிகச்சரியாய்,
நான் கிழக்கு நோக்கி யாசிக்கத் தொடங்குகிறேன்...!!
அதுவும் பொய்யெனப் பொய்த்துப் போகாமல்,
முதலில் இரு கண்களை மூடி -
அதனைத்தொடர்ந்து கைகளைக் கூப்பியும்..
என் சனனக் காலம் முதற்கொண்டு,
அங்கே அதுவும்,
இங்கே இதுவும் எனதேடி முடித்தப் பிறகும்
எனக்கும்,
என் இதயத்தின் கனத்தைக் கூட்டும் மனதிற்கும் விளங்கவில்லை
"ஏனோ இந்த யாசகம்.....??"
கிழக்கு -விடியல்களை தினமும் பரிசளிக்கும் திசை என
சூரியன் உணர்துவதாலா?
இல்லை
தினசரி விடியல்களை
கிழக்கெதிர் திசைபிடுங்கித் தின்பதாலா..??
உதிக்க வைத்துப் பின் தின்னக்கொடுத்து
மீண்டும் உதித்து எழச் செய்வதாலோ என்னவோ
கிழக்கு ஒரு உன்னத திசை
என்பதை நான் அறிந்துசெய்யும் இந்த யாசகம்..
எனக்கும் ஒரு விடியலை தின்னக் கொடுக்கும்
எனும் "நம்பிக்கையில்..........."
காதல் தோல்வி....
அவன்:
இதோ...
அவளைப்பற்றிஆயிரம் கோடி பனிக்கட்டி கவிதைகள்...
ஒவ்வொன்றும்,
அவளின் எடை அளவுகள்..
அவை அனைத்தும் சிலிர்த்துக்கொண்டு
தனித்தனியாய் உருகிட,
அனைத்தையும்,
என் வலது உள்ளங்கையின்
ஓர் ஓரத்தில் தக்க வைக்கிறேன்..
அவள் முன்பே சொல்லி விட்டாள்..
என் கை நிறைய அவ்வுருகல்களை
அள்ளி எடுத்து சென்றால் தான்
என் காதலை ஏற்கஅவள் மனம் இறங்குமாம்....
அவள்:
இறையே...
ஒரு நொடியை,
நிமிடத்தின் அளவாக நீட்டித்து,
அக்கணக்கில்,
நூறு வருடம் ஆயுளை
அவனுக்கு மட்டும் தந்து விடு...
இது,
அவனுக்காய் நான் உருகி வேண்டும்
ஒரு கானல் வரம்...
வரத்தின் தோற்றத்தில்,
ஓர் நீட்டித்த ஆயுள் வாழ் தண்டனை...!!
என் காதலின் கர்வம்
சத்தியமென நினைக்கிறது...
என் போல துணை ஒருத்தி
நிச்சயமாய் இருந்திருக்க வேண்டும் என
அவனுக்குனர்த்தும் அந்த நீட்டித்த ஆயுட்காலம் என....
இதோ...
அவளைப்பற்றிஆயிரம் கோடி பனிக்கட்டி கவிதைகள்...
ஒவ்வொன்றும்,
அவளின் எடை அளவுகள்..
அவை அனைத்தும் சிலிர்த்துக்கொண்டு
தனித்தனியாய் உருகிட,
அனைத்தையும்,
என் வலது உள்ளங்கையின்
ஓர் ஓரத்தில் தக்க வைக்கிறேன்..
அவள் முன்பே சொல்லி விட்டாள்..
என் கை நிறைய அவ்வுருகல்களை
அள்ளி எடுத்து சென்றால் தான்
என் காதலை ஏற்கஅவள் மனம் இறங்குமாம்....
அவள்:
இறையே...
ஒரு நொடியை,
நிமிடத்தின் அளவாக நீட்டித்து,
அக்கணக்கில்,
நூறு வருடம் ஆயுளை
அவனுக்கு மட்டும் தந்து விடு...
இது,
அவனுக்காய் நான் உருகி வேண்டும்
ஒரு கானல் வரம்...
வரத்தின் தோற்றத்தில்,
ஓர் நீட்டித்த ஆயுள் வாழ் தண்டனை...!!
என் காதலின் கர்வம்
சத்தியமென நினைக்கிறது...
என் போல துணை ஒருத்தி
நிச்சயமாய் இருந்திருக்க வேண்டும் என
அவனுக்குனர்த்தும் அந்த நீட்டித்த ஆயுட்காலம் என....
பஞ்ச பூதத்தின் காதல் பிரிவுத் தூது..
நம் மனதில் நம் நிழற்படமே,பிரிவைத் தேற்றும் ஓர் ஆயுதம்..அதைத் தாண்டி பஞ்ச பூதத்தின் தேற்றுதல்..அதன் தூதை உணர்ந்திடுவாய் என் அன்பே...
நீர்:
உன் நினைவை என் உருக்கொண்டு
கடல் நீரில் நெடுநேரம் நின்றிட்டேன்...
கடல் மண்ணினிலே என் கால் புதைந்து
அலைநீர் உள் அழைத்துச் சென்றிடவே,
திடுக்கென்று விழித்து எழுந்தேன்......!!!
அன்பே,
உன் கடல் நீரினிலே
என் நினைவை உன் உருக்கொண்டு
நெடுநேரம் நிற்காதே!!
கடல் அலையே தூதாகி,
நம் கண்ணீர் மறைக்க நினைத்தாலும்,
நம் காதலில் சற்றே வயிறெரிந்து,
அலை உன்னையும் உட்கொள்ளப் பார்த்திடுமே....!!
நெருப்பு:
அழகான குளிர் இரவின் பனி பொழுதில்,
உன் இதழ் அதிலே கனி வைத்து சமைத்திடவே
என் உடலெங்கும் தீ சுவாலை...
அது உயிர் கவ்வி நெளிகிறதே என் அன்பே..
என் அனல் நெருப்பை நீ அறிந்திடவே,
தன் உருமாறி தூதாகி,
நீ ஏற்றும் மெழுகு அதிலே,
வளைந்து நெளிந்தாடும் தீ அது ஒளியாய்!!!
காற்று:
மெல்ல மெல்ல உன் மேனி தொட்டுதவழ்ந்திடும்
இம்மெல்லிசு காற்று..
பின் என் கரம் பட்டு உன் இடைதழுவி
பேரின்ப வாடையை பரப்பிடுதே..
உன்னை நன் வருடி,
நீ மயங்கும் குறையை தீர்த்திடவே,
காற்று விடும் தூது,
அது நம்மை தேற்றிடவே...
ஆகாயம்:
இரவு வானின் வெண்ணிலவு,
விண்மீன்கள்,
உற்று நோக்கின் கூடு தேடும் வெண் பறவைக் கூட்டம்,
இதை நான் படுத்தே ரசித்திருப்பேன்..
அதை நீயும் ரசிக்க வானம் திரண்டு வாய்ப்பளிக்கின்றதே??
காணும் காட்சியினை ஒன்றாக்கி,
நாம் பிரிந்திருக்கும் தூரம் மிகக்குறைவு
எனஆகாயம் தூதனுப்பி வைத்தாலும்,
என் விழிகளில் கண்நீர்குட்டை -
அதுதேங்கித் தான் கிடக்கிறதே..
நிலம்:
என் வீட்டைச் சுற்றி உன் கால் வழி பாதங்கள்...
உனை நினைத்தே தினம் உருகி நன் நடக்கயிலே,
உன் பாதம் - அதனருகில் என் பாதம்!!
அது ஜோடி சேர்ந்து நமை பார்த்து சிரித்திடுதே..
நிலம் அதுவும் தூதனுப்பி,
கலங்காதே என்கிறதே....
அது ஏன் என்று அமர்ந்தோசி..
உனை உண்ணாமல் இப்புவியில் நான் காத்திருக்க...
வினைக்கனி உண்ணாஆதாமும் ஏவாளும் நாமென மாறிடவோ?
நீர்:
உன் நினைவை என் உருக்கொண்டு
கடல் நீரில் நெடுநேரம் நின்றிட்டேன்...
கடல் மண்ணினிலே என் கால் புதைந்து
அலைநீர் உள் அழைத்துச் சென்றிடவே,
திடுக்கென்று விழித்து எழுந்தேன்......!!!
அன்பே,
உன் கடல் நீரினிலே
என் நினைவை உன் உருக்கொண்டு
நெடுநேரம் நிற்காதே!!
கடல் அலையே தூதாகி,
நம் கண்ணீர் மறைக்க நினைத்தாலும்,
நம் காதலில் சற்றே வயிறெரிந்து,
அலை உன்னையும் உட்கொள்ளப் பார்த்திடுமே....!!
நெருப்பு:
அழகான குளிர் இரவின் பனி பொழுதில்,
உன் இதழ் அதிலே கனி வைத்து சமைத்திடவே
என் உடலெங்கும் தீ சுவாலை...
அது உயிர் கவ்வி நெளிகிறதே என் அன்பே..
என் அனல் நெருப்பை நீ அறிந்திடவே,
தன் உருமாறி தூதாகி,
நீ ஏற்றும் மெழுகு அதிலே,
வளைந்து நெளிந்தாடும் தீ அது ஒளியாய்!!!
காற்று:
மெல்ல மெல்ல உன் மேனி தொட்டுதவழ்ந்திடும்
இம்மெல்லிசு காற்று..
பின் என் கரம் பட்டு உன் இடைதழுவி
பேரின்ப வாடையை பரப்பிடுதே..
உன்னை நன் வருடி,
நீ மயங்கும் குறையை தீர்த்திடவே,
காற்று விடும் தூது,
அது நம்மை தேற்றிடவே...
ஆகாயம்:
இரவு வானின் வெண்ணிலவு,
விண்மீன்கள்,
உற்று நோக்கின் கூடு தேடும் வெண் பறவைக் கூட்டம்,
இதை நான் படுத்தே ரசித்திருப்பேன்..
அதை நீயும் ரசிக்க வானம் திரண்டு வாய்ப்பளிக்கின்றதே??
காணும் காட்சியினை ஒன்றாக்கி,
நாம் பிரிந்திருக்கும் தூரம் மிகக்குறைவு
எனஆகாயம் தூதனுப்பி வைத்தாலும்,
என் விழிகளில் கண்நீர்குட்டை -
அதுதேங்கித் தான் கிடக்கிறதே..
நிலம்:
என் வீட்டைச் சுற்றி உன் கால் வழி பாதங்கள்...
உனை நினைத்தே தினம் உருகி நன் நடக்கயிலே,
உன் பாதம் - அதனருகில் என் பாதம்!!
அது ஜோடி சேர்ந்து நமை பார்த்து சிரித்திடுதே..
நிலம் அதுவும் தூதனுப்பி,
கலங்காதே என்கிறதே....
அது ஏன் என்று அமர்ந்தோசி..
உனை உண்ணாமல் இப்புவியில் நான் காத்திருக்க...
வினைக்கனி உண்ணாஆதாமும் ஏவாளும் நாமென மாறிடவோ?
வெற்று மார்க்கூடும் காதல் வடிகட்டியும்....
என் காதல்துணை என்னிடம் கெஞ்சிக் கேட்டுச் சென்ற பின்னர்,
கடைசி முயற்சியென,
சிதறிக்கிடந்த துகள்கள் தன்னைதனித்தனியாய் பிரித்தெடுத்து,
பின் ஒவ்வொன்றையும் வடியலிட்டு,
அழகழகாய் அடுக்கிக்கட்டி,
"காற்று மட்டும் புகுந்து செல்லும் - ஆனால்,
தன்னிச்சை இயக்கம் இல்லா கூட்டிற்குள்'வைத்துப் பூட்டி முடித்து,
"வெற்று மார்" தட்டிக்கொண்டேன்....
பின்,அப்பாடா என
பெருமூச்சுக்காற்றைவெளியனுப்பிவிட்டு நிமிர்ந்த நேரம்...
அக்கூட்டிர்க் குள்ளிருந்து அழுகுரல் -
அதுஎன் காதுகளில் மட்டும்.....!!!
பாவம்...
அக்கட்டிற்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை போலும்...
வடித்து எடுத்துவிட்டால்,
காதல் அத்தனையும் நீங்கிவிடும் என நினைத்தேன்...
ஆனால் - குருதி மட்டும் தான் வடிந்துத் தேங்கியது போலும்...
அட இப்போதும் கூட்டிற்குள்காதல் சக்கை மட்டுமே மீதம்....
செதில் செதிலாய் வலிக்கிறதே...
வெற்று மார்பும் துடிக்கிறதே...
நான் யாரை உதவிக்கு அழைக்க?
கேட்போரிடம் எப்படிச் சொல்ல?
காதல்துணை "மறந்துவிடு" எனக் கெஞ்சிக் கேட்டு சென்ற பின்னர்
எண்ணிலா சுக்காக வெடித்துச் சிதறியது
இப்போது வெறும் துகளாகிப் போன - ஆனால்,
அப்போது அத்துணை மட்டுமே முழுவதுமாய் நிரம்பி இருந்த -
என் "இதயம்" தான் என்று.......?????
கடைசி முயற்சியென,
சிதறிக்கிடந்த துகள்கள் தன்னைதனித்தனியாய் பிரித்தெடுத்து,
பின் ஒவ்வொன்றையும் வடியலிட்டு,
அழகழகாய் அடுக்கிக்கட்டி,
"காற்று மட்டும் புகுந்து செல்லும் - ஆனால்,
தன்னிச்சை இயக்கம் இல்லா கூட்டிற்குள்'வைத்துப் பூட்டி முடித்து,
"வெற்று மார்" தட்டிக்கொண்டேன்....
பின்,அப்பாடா என
பெருமூச்சுக்காற்றைவெளியனுப்பிவிட்டு நிமிர்ந்த நேரம்...
அக்கூட்டிர்க் குள்ளிருந்து அழுகுரல் -
அதுஎன் காதுகளில் மட்டும்.....!!!
பாவம்...
அக்கட்டிற்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை போலும்...
வடித்து எடுத்துவிட்டால்,
காதல் அத்தனையும் நீங்கிவிடும் என நினைத்தேன்...
ஆனால் - குருதி மட்டும் தான் வடிந்துத் தேங்கியது போலும்...
அட இப்போதும் கூட்டிற்குள்காதல் சக்கை மட்டுமே மீதம்....
செதில் செதிலாய் வலிக்கிறதே...
வெற்று மார்பும் துடிக்கிறதே...
நான் யாரை உதவிக்கு அழைக்க?
கேட்போரிடம் எப்படிச் சொல்ல?
காதல்துணை "மறந்துவிடு" எனக் கெஞ்சிக் கேட்டு சென்ற பின்னர்
எண்ணிலா சுக்காக வெடித்துச் சிதறியது
இப்போது வெறும் துகளாகிப் போன - ஆனால்,
அப்போது அத்துணை மட்டுமே முழுவதுமாய் நிரம்பி இருந்த -
என் "இதயம்" தான் என்று.......?????
பணம்........
உருண்டையாக்கப்பட்ட உலோகமும்
வெட்டிச் செப்பனிட்ட காகிதமும்
ஜீவ இருப்பை நீளச்செய்ய
ஆறறிவி தன் புத்தியாலே கண்டறிந்து
பின் செயற்கைக்கு ஈந்து விட்ட குறுவரங்கள்...
கண்டறிந்து ஈயும் வரை அவ்வாறறிவி
கடவுளாய் வாழ்ந்திருந்தான்...
காலக்கடத்தலில்,
ஈந்திட்ட வரத்தினை திருப்பிடும் முயற்சியில்,
முழுக்கதையின் முக்கால் அத்தியாயம் முற்றும் -
எனக் கோடிடும் போது எத்தனித்து,
அடுத்தது ஆரம்பம் -
எனத் தொடங்கும் போது
பெருவாராய் முடிகிறது
கடவுளாய்ப் பிறந்து
மனிதனாய்த் தேய்ந்த
அவனின் ஜீவ இருப்பு.....
வெட்டிச் செப்பனிட்ட காகிதமும்
ஜீவ இருப்பை நீளச்செய்ய
ஆறறிவி தன் புத்தியாலே கண்டறிந்து
பின் செயற்கைக்கு ஈந்து விட்ட குறுவரங்கள்...
கண்டறிந்து ஈயும் வரை அவ்வாறறிவி
கடவுளாய் வாழ்ந்திருந்தான்...
காலக்கடத்தலில்,
ஈந்திட்ட வரத்தினை திருப்பிடும் முயற்சியில்,
முழுக்கதையின் முக்கால் அத்தியாயம் முற்றும் -
எனக் கோடிடும் போது எத்தனித்து,
அடுத்தது ஆரம்பம் -
எனத் தொடங்கும் போது
பெருவாராய் முடிகிறது
கடவுளாய்ப் பிறந்து
மனிதனாய்த் தேய்ந்த
அவனின் ஜீவ இருப்பு.....
Subscribe to:
Posts (Atom)