என் காதல்துணை என்னிடம் கெஞ்சிக் கேட்டுச் சென்ற பின்னர்,
கடைசி முயற்சியென,
சிதறிக்கிடந்த துகள்கள் தன்னைதனித்தனியாய் பிரித்தெடுத்து,
பின் ஒவ்வொன்றையும் வடியலிட்டு,
அழகழகாய் அடுக்கிக்கட்டி,
"காற்று மட்டும் புகுந்து செல்லும் - ஆனால்,
தன்னிச்சை இயக்கம் இல்லா கூட்டிற்குள்'வைத்துப் பூட்டி முடித்து,
"வெற்று மார்" தட்டிக்கொண்டேன்....
பின்,அப்பாடா என
பெருமூச்சுக்காற்றைவெளியனுப்பிவிட்டு நிமிர்ந்த நேரம்...
அக்கூட்டிர்க் குள்ளிருந்து அழுகுரல் -
அதுஎன் காதுகளில் மட்டும்.....!!!
பாவம்...
அக்கட்டிற்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை போலும்...
வடித்து எடுத்துவிட்டால்,
காதல் அத்தனையும் நீங்கிவிடும் என நினைத்தேன்...
ஆனால் - குருதி மட்டும் தான் வடிந்துத் தேங்கியது போலும்...
அட இப்போதும் கூட்டிற்குள்காதல் சக்கை மட்டுமே மீதம்....
செதில் செதிலாய் வலிக்கிறதே...
வெற்று மார்பும் துடிக்கிறதே...
நான் யாரை உதவிக்கு அழைக்க?
கேட்போரிடம் எப்படிச் சொல்ல?
காதல்துணை "மறந்துவிடு" எனக் கெஞ்சிக் கேட்டு சென்ற பின்னர்
எண்ணிலா சுக்காக வெடித்துச் சிதறியது
இப்போது வெறும் துகளாகிப் போன - ஆனால்,
அப்போது அத்துணை மட்டுமே முழுவதுமாய் நிரம்பி இருந்த -
என் "இதயம்" தான் என்று.......?????
0 comments:
Post a Comment