skip to main | skip to sidebar

நீர்க்குமிழி

காற்றாய் நுழைந்த கனங்களின் உட்பொதிவில்.......

பஞ்ச பூதத்தின் காதல் பிரிவுத் தூது..

நம் மனதில் நம் நிழற்படமே,பிரிவைத் தேற்றும் ஓர் ஆயுதம்..அதைத் தாண்டி பஞ்ச பூதத்தின் தேற்றுதல்..அதன் தூதை உணர்ந்திடுவாய் என் அன்பே...
நீர்:
உன் நினைவை என் உருக்கொண்டு
கடல் நீரில் நெடுநேரம் நின்றிட்டேன்...
கடல் மண்ணினிலே என் கால் புதைந்து
அலைநீர் உள் அழைத்துச் சென்றிடவே,
திடுக்கென்று விழித்து எழுந்தேன்......!!!
அன்பே,
உன் கடல் நீரினிலே
என் நினைவை உன் உருக்கொண்டு
நெடுநேரம் நிற்காதே!!
கடல் அலையே தூதாகி,
நம் கண்ணீர் மறைக்க நினைத்தாலும்,
நம் காதலில் சற்றே வயிறெரிந்து,
அலை உன்னையும் உட்கொள்ளப் பார்த்திடுமே....!!
நெருப்பு:
அழகான குளிர் இரவின் பனி பொழுதில்,
உன் இதழ் அதிலே கனி வைத்து சமைத்திடவே
என் உடலெங்கும் தீ சுவாலை...
அது உயிர் கவ்வி நெளிகிறதே என் அன்பே..
என் அனல் நெருப்பை நீ அறிந்திடவே,
தன் உருமாறி தூதாகி,
நீ ஏற்றும் மெழுகு அதிலே,
வளைந்து நெளிந்தாடும் தீ அது ஒளியாய்!!!
காற்று:
மெல்ல மெல்ல உன் மேனி தொட்டுதவழ்ந்திடும்
இம்மெல்லிசு காற்று..
பின் என் கரம் பட்டு உன் இடைதழுவி
பேரின்ப வாடையை பரப்பிடுதே..
உன்னை நன் வருடி,
நீ மயங்கும் குறையை தீர்த்திடவே,
காற்று விடும் தூது,
அது நம்மை தேற்றிடவே...
ஆகாயம்:
இரவு வானின் வெண்ணிலவு,
விண்மீன்கள்,
உற்று நோக்கின் கூடு தேடும் வெண் பறவைக் கூட்டம்,
இதை நான் படுத்தே ரசித்திருப்பேன்..
அதை நீயும் ரசிக்க வானம் திரண்டு வாய்ப்பளிக்கின்றதே??
காணும் காட்சியினை ஒன்றாக்கி,
நாம் பிரிந்திருக்கும் தூரம் மிகக்குறைவு
எனஆகாயம் தூதனுப்பி வைத்தாலும்,
என் விழிகளில் கண்நீர்குட்டை -
அதுதேங்கித் தான் கிடக்கிறதே..
நிலம்:
என் வீட்டைச் சுற்றி உன் கால் வழி பாதங்கள்...
உனை நினைத்தே தினம் உருகி நன் நடக்கயிலே,
உன் பாதம் - அதனருகில் என் பாதம்!!
அது ஜோடி சேர்ந்து நமை பார்த்து சிரித்திடுதே..
நிலம் அதுவும் தூதனுப்பி,
கலங்காதே என்கிறதே....
அது ஏன் என்று அமர்ந்தோசி..
உனை உண்ணாமல் இப்புவியில் நான் காத்திருக்க...
வினைக்கனி உண்ணாஆதாமும் ஏவாளும் நாமென மாறிடவோ?

0 comments:

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

என்னைப் பற்றி:

தேவிகா
சத்தம் வெறுப்பவள். தனிமை நேசிக்கப் பழகியவள். வேறொன்றுமில்லை சொல்வதற்கு.
View my complete profile

இது வரை....

  • ►  2009 (2)
    • ►  November (2)
  • ▼  2010 (12)
    • ▼  July (3)
      • பணம்........
      • வெற்று மார்க்கூடும் காதல் வடிகட்டியும்....
      • பஞ்ச பூதத்தின் காதல் பிரிவுத் தூது..
    • ►  August (4)
    • ►  September (5)
  • ►  2011 (2)
    • ►  February (1)
    • ►  March (1)

Followers:

Total Pageviews

Subscribe to:

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
 
Copyright © நீர்க்குமிழி. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio