skip to main | skip to sidebar

நீர்க்குமிழி

காற்றாய் நுழைந்த கனங்களின் உட்பொதிவில்.......

கண்ணீரும் வியர்வையும் கரிக்கின்ற காரணமேன்?

பரிதவிப்போ இல்லை பரவசமோ...
கண் கொண்ட நீர் அறியும்
அது பெருகிவரும் காரணம் தன்னை...
வியர்வையும் நன்கறியும் - அது
உழைப்பு விடும் பரவசக் கண்ணீரென்று....
அந்நீர்கள் நிலத்தினிலே விழுந்திட்டால்
ஊரார் பார்த்திடுவர்;
பின் அங்கே,
அந்நீரின் "நதிமூலம்" ஆய ஆர்வம் கொண்டு - ஆனால்
அதை முழுதாயும் ஆயாமல்,
அவ்வூரின் "கடைமனிதன்" அவன் செவியில்
மூலத்தைத் திரித்துப் போய்ச் சேர்த்திடுவார்
எனப் பயந்து,
யாருக்கும் தெரியாமல் ஆழியிலேக் கலந்திடவே
சட்டெனத் தன்ச்சுவை மாற்றிக்
கரித்துக்கொண்டு வந்தனவோ......???

0 comments:

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

என்னைப் பற்றி:

தேவிகா
சத்தம் வெறுப்பவள். தனிமை நேசிக்கப் பழகியவள். வேறொன்றுமில்லை சொல்வதற்கு.
View my complete profile

இது வரை....

  • ►  2009 (2)
    • ►  November (2)
  • ▼  2010 (12)
    • ►  July (3)
    • ▼  August (4)
      • காதல் தோல்வி....
      • கிழக்கு நமஸ்காரம் (சூரிய நமஸ்காரம் அல்ல....!!!)
      • என் இதயத்தின் முதுகில் கூர் வாள்.!
      • கண்ணீரும் வியர்வையும் கரிக்கின்ற காரணமேன்?
    • ►  September (5)
  • ►  2011 (2)
    • ►  February (1)
    • ►  March (1)

Followers:

Total Pageviews

Subscribe to:

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
 
Copyright © நீர்க்குமிழி. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio