என் தேடல்கள்,
உச்சி தொடங்கி,
கால் விரலின் நுனி தாண்டி
நூற்றாண்டு அணைக்கட்டு
வெள்ளப்பெருக்கில் உடைவடைப் போல
திடுமெனப் பொங்கிப் பெருகும் போதெல்லாம்,
மிகச்சரியாய்,
நான் கிழக்கு நோக்கி யாசிக்கத் தொடங்குகிறேன்...!!
அதுவும் பொய்யெனப் பொய்த்துப் போகாமல்,
முதலில் இரு கண்களை மூடி -
அதனைத்தொடர்ந்து கைகளைக் கூப்பியும்..
என் சனனக் காலம் முதற்கொண்டு,
அங்கே அதுவும்,
இங்கே இதுவும் எனதேடி முடித்தப் பிறகும்
எனக்கும்,
என் இதயத்தின் கனத்தைக் கூட்டும் மனதிற்கும் விளங்கவில்லை
"ஏனோ இந்த யாசகம்.....??"
கிழக்கு -விடியல்களை தினமும் பரிசளிக்கும் திசை என
சூரியன் உணர்துவதாலா?
இல்லை
தினசரி விடியல்களை
கிழக்கெதிர் திசைபிடுங்கித் தின்பதாலா..??
உதிக்க வைத்துப் பின் தின்னக்கொடுத்து
மீண்டும் உதித்து எழச் செய்வதாலோ என்னவோ
கிழக்கு ஒரு உன்னத திசை
என்பதை நான் அறிந்துசெய்யும் இந்த யாசகம்..
எனக்கும் ஒரு விடியலை தின்னக் கொடுக்கும்
எனும் "நம்பிக்கையில்..........."
0 comments:
Post a Comment