skip to main | skip to sidebar

நீர்க்குமிழி

காற்றாய் நுழைந்த கனங்களின் உட்பொதிவில்.......

ருத்ரப் பாவை..

சடுதிப் புறப்பாட்டில்,
இறக்கைகள் பிய்ந்து -
பிராணத் தேடலின் வேர்க்காற்று
பலமாய் குருதியில் கலந்து
கொப்பளிக்கும் குமிழிகளை
தன் கூர் அலகில் தோய்த்தெடுத்து,
எதிர் நிற்கும் மானுடம் துளைக்க
பறந்து செல்லும்
என் சிவப்பு "ஆத்திரப்" பறவையும்
அதனின் மொத்த பளுவும்;

அழுத்தச் சமன்நிலை
செறிவுற்று நிரம்பி,
வெடிக்கத் தடமற்று,
உப்பித் தொங்கும் நிமிடத்தில்
என் விரல் தூக்கி எறிந்து
தெறிக்கும் அத்தனை சுக்கிலும்
என் தொங்கி நின்ற அகங்காரம்!!

நானே - என் அத்தனைக்கும் சல்லடை...
ஆத்திரம் வடிகட்டி
சக்கைப் பருகல் பல நேரம்;
நானே - என் அத்தனைக்கும் குயவன்....
ஆத்திர மண்கொண்டே
பாண்டங்கள் பல நேரம்...

நேர்க்கோட்டுச் சூழலில்,
சுழியேற்றித் தடம் மாற்றி
அதனூடே சுழித்துப் போன
ருத்ரப் பாவையாய்....
நானே,
என் அத்தனைக்கும் நானே...

0 comments:

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

என்னைப் பற்றி:

தேவிகா
சத்தம் வெறுப்பவள். தனிமை நேசிக்கப் பழகியவள். வேறொன்றுமில்லை சொல்வதற்கு.
View my complete profile

இது வரை....

  • ►  2009 (2)
    • ►  November (2)
  • ▼  2010 (12)
    • ►  July (3)
    • ►  August (4)
    • ▼  September (5)
      • "நான் தாயாகிப் போனேனே....."
      • புத்தன் வெட்டிய போதி மரம்...
      • ஒரு கன்றின் ஒரு நாள் கதை...
      • ருத்ரப் பாவை..
      • தளும்பியே களைத்த தண்ணீர....!!! (அல்லது) தண்ணீர் கு...
  • ►  2011 (2)
    • ►  February (1)
    • ►  March (1)

Followers:

Total Pageviews

Subscribe to:

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
 
Copyright © நீர்க்குமிழி. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio