skip to main | skip to sidebar

நீர்க்குமிழி

காற்றாய் நுழைந்த கனங்களின் உட்பொதிவில்.......

தையல்....

தன் உடுப்புக் கிழிசல் வழி
உடல் தெரிய
அங்கே ஆணினம் கண்டிடப்பார்த்து
உயிர்கிழிந்த வலி போலே
குறுகிட்டாள் அங்கோர் ஏழைப் பெண்..
உடுப்பில் செயற்கைக் கிழிசல்
பல செய்து
ஆணினம் கவருவதில்
போதைக் கொண்டு மயங்கிட்டாள்
இங்கோர் மேலைப் பெண்..
பொம்மைச் சமுதாயத்தின் வாயின்வழி
வறுமையின் கிழிசல் வசை கூட வாங்குமாம்..
செயற்கைக் கிழிசலுக்கு"நாகரீகம்" எனும் பட்டமாம்.....!!
இந்நாகரீக கிழிசல்கள்
மொத்தமும் தைத்து விட
அத்தையலின் கை வருமா..??
கை வந்து சேர்ந்த பின்னர்
பழம் "கலைச்சாரம்" திரும்பிடுமா...??
இங்கே விடைகள் எல்லாம் மீதம்...
அவர் மனம் துளைக்கும் கேள்விகள் உண்டா...?
பொறுத்தேப் பார்ப்போம்..

0 comments:

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

என்னைப் பற்றி:

தேவிகா
சத்தம் வெறுப்பவள். தனிமை நேசிக்கப் பழகியவள். வேறொன்றுமில்லை சொல்வதற்கு.
View my complete profile

இது வரை....

  • ▼  2009 (2)
    • ▼  November (2)
      • நாத்திகம் - மூக்குடைப்பு விளக்கம் தேவை...!
      • தையல்....
  • ►  2010 (12)
    • ►  July (3)
    • ►  August (4)
    • ►  September (5)
  • ►  2011 (2)
    • ►  February (1)
    • ►  March (1)

Followers:

Total Pageviews

Subscribe to:

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
 
Copyright © நீர்க்குமிழி. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio