skip to main | skip to sidebar

நீர்க்குமிழி

காற்றாய் நுழைந்த கனங்களின் உட்பொதிவில்.......

நியாயங்கள்

கூர்முனை குண்டூசியொத்த
சிறுத்தப் புள்ளியின் மேல்
இடுக்கிடுக்காய் சுழித்து,
நெருக்கி அடுக்கப்பட்ட
அரிதில் நியாயங்கள்!

நியாயம் வரைவின்
பின்னொழுகுதல் காலத்தில்
எமைச் சூழ்ந்திருக்கும் வாயுவிலும்
சல்லடைக் கண்கள்!
நிரப்பிகள் எத்துனை அளவிலோ,
அத்தனையும் மிக எளிதாய்
அதனின் அப்பக்கம் நுழைந்து விடும்!

வேறோர் சூழலின் தாங்கியில்
இன்னோர் கைப்பிடியும் அவிழும்பொழுதில்
மிகச்சரியாய் மேல் அமர்ந்து
கைக்கொத்திப் பிடி தளர்த்தும்
இக் "காக்கை" நியாயம்.

வளை வளையாய் சென்ற பின்
கோடாகும் முயற்சிக்கு,
இழுவிசை நுணுக்கங்களின் தேவைகள்,
கச்சித நிச்சயங்கள்!
அனால் அவைகள் நியாயங்களின் நீர்ப்பையில் -
முழுதும் கரைந்தே வெளியேறிவிடும்!

நியாயங்கள் - அது மூக்குச் சிவந்தவனின்
கடும் மலைச் சிகரம்.
இடறுதல் அச்சிவந்த மூக்களிக்கும்.
ஏறுதல் அவனுக்குச் சிரமம்.

1 comments:

Devi said...

Thank you for your feedback. I rarely write these days and planning to start again. Thank you!

August 27, 2019 at 9:20 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

என்னைப் பற்றி:

தேவிகா
சத்தம் வெறுப்பவள். தனிமை நேசிக்கப் பழகியவள். வேறொன்றுமில்லை சொல்வதற்கு.
View my complete profile

இது வரை....

  • ►  2009 (2)
    • ►  November (2)
  • ►  2010 (12)
    • ►  July (3)
    • ►  August (4)
    • ►  September (5)
  • ▼  2011 (2)
    • ▼  February (1)
      • நியாயங்கள்
    • ►  March (1)

Followers:

Total Pageviews

Subscribe to:

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
 
Copyright © நீர்க்குமிழி. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio