skip to main | skip to sidebar

நீர்க்குமிழி

காற்றாய் நுழைந்த கனங்களின் உட்பொதிவில்.......

ஆழியின் "கொல் பாசறை"

பாழ் பண்ணும் நோக்கங்கால்
பேரலை தன் பாதமதை கரைவெளி கொணர
அக்குறி மீறி பாழாகிப் போனதோ
ஆவியோட நைத்துமிங்கே!

பேரலையோடுப் புவி நடுக்கம் - அங்கே,
உடல் அமுத்தும் "கல்" தப்ப ,
மறை செய்யும் அவர் ஓர்ப்பக்கம்
பிராணவளி அடைநீர் தப்ப
ஓர் வழியுமில்லா இவருமோர்ப் பக்கம்

இவ் வாழியின் (?!) கொல் பாசறை -
அதனின் கரையினூடே தொடக்கம்.
முற்றுவாயில்,
எங்கள் சிறுபிள்ளை துயிலும்
கட்டிடத்தின் மறுபுற கொல்லை!

பல்லாயிரங்கள் கணக்காம்
அச்சப்பானின் உயிர்பலி!
ஐயோ!
ஆற்றுதல் யார் சொல்ல?
அனைவருமிங்கே மனம் குமுறி நிற்க?

நான்கை நாம் மறந்தோமோ?
பதினோரு மேன் கூடியதோ?
நாட் கணக்கு எத்தனையோ
இவர் சீராகித் திரும்பி எழ?

மலைக்கிதிங்கே மனம்
அச்சீர்ப் பணியை நினைக்கயிலே!
உயர்வேகத்தில் சேர்ந்திடுக
அவர்தம் வேண்டுதலத்தனையும்.

எங்கள் இறை காண் வேண்டுதல்கள்
சென்றிடுக அவர்தன் நம்பிக்கையாய்!
எங்கள் இறை காண் வேண்டுதல்கள்
சென்றிடுக அவர்தன் நம்பிக்கையாய்! 

0 comments:

Post a Comment

« Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

என்னைப் பற்றி:

தேவிகா
சத்தம் வெறுப்பவள். தனிமை நேசிக்கப் பழகியவள். வேறொன்றுமில்லை சொல்வதற்கு.
View my complete profile

இது வரை....

  • ►  2009 (2)
    • ►  November (2)
  • ►  2010 (12)
    • ►  July (3)
    • ►  August (4)
    • ►  September (5)
  • ▼  2011 (2)
    • ►  February (1)
    • ▼  March (1)
      • ஆழியின் "கொல் பாசறை"

Followers:

Total Pageviews

Subscribe to:

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
 
Copyright © நீர்க்குமிழி. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio